பராக் ஒபாமாவின் ஊடகப் பேச்சாளரே சரத் பொன்சேகா.
முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகா இன்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இலங்கைக்கான ஊடகப் பேச்சாளராகச் செயல்படுகின்றார் என தேசிய சுதந்திர முன்னணி குற்றஞ் சாட்டியுள்ளது.
பிரித்தானிய த டெலிகிராப் நாளேட்டின் இலங்கை நிருபர் நெல்சனுடன் நடாத்திய கலந்துரையாடலில் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துகள் தேசத்துரோகமானவை என கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழு உறுப்பினரான பியசிரி விஜேநாயக்க மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் ,இன்றைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதை அடிப்படையாகக் கொண்ட போராடத்தை ஆரம்பித்துள்ளார்கள். ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரச சார்பற்ற அமைப்புகள் இந்த அணிக்குள் வருகின்றன. அமெரிக்கா, ஐக்கிய நாடுகளை முதன்மையாகக் கொண்ட ஏகாதிபத்திய மேற்கு நாடுகள் அந்த போராட்டத்தை உருவாக்கியுள்ளன.
அரசாங்கத்துக்குள் இருக்கும் வேலைகளை நிலை குலைக்கும் பிரிவினர், நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் குழுவினர் மேற்படி போராட்டத்துக்கு துணை போகிறார்கள். சரத் பொன்சேகா த டெலிசிராப் இதழுக்கு அளித்த பேட்டி இதனை தெளிவாகக் காட்டுகின்றது என்று திரு விஜேநாயக்கா விளக்கியுள்ளார்.
0 comments :
Post a Comment