Thursday, July 19, 2012

மட்டக்களப்பு மாவட்டவேட்பாளர் விபரம். (இரண்டாம் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 21 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 34 வேட்புமனுப் பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இதில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி உட்பட 13 அரசியல் கட்சிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.

அத்தோடு 21 சயேட்சைக் குழுக்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.

வேட்புமனுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து நண்பகல் 12 மணி தொடக்கம் 1 மணிவரை முறைப்பாடு செய்யும் நேரமாக அவகாசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் பிரதி நிதிகளுக்கான கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் சுயேட்சைக்குழுக்கு சின்னங்களும் இதன் போது வழங்கப்பட்டன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கையளித்துள்ள பிரதான கட்சிகளில் போட்டியிடுபவர்களின் விபரங்கள்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி:

கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம்,
கோவிந்தன் கருணாகரம்,
கதிர்காமாத்தம்பி குருநாதன்,
இராசையா துரைரெத்தினம்,
இரத்தினசிங்கம் மகேந்திரன்,
இந்திரகுமார் நித்தியானந்தம்,
சோமசுந்தரம் யோகானந்தராசா,
கிருஸ்ணபிள்ளை சேயோன்,
சோமசுந்தரம் மகேந்திரலிங்கம்,
மார்கண்டு நடராசா,
பழனித்தம்பி குணசேகரன்,
ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை,
தங்கராசா மனோகரராசா,
பரசுராமன் சிவனேசன்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு:

சி.சந்திரகாந்தன்,
அமீர்அலி சயிப்டீன்,
அலிஸாகீர் மௌலானா செயிட்,
நாகலிங்கம் திரவியம்,
எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா,
பூபாலப்பிள்ளை பிரசாந்தன்,
கணபதிப்பிள்ளை மோகன்,
விநாயகமூர்த்தி சிறிதரன்,
ருத்திரமலர் ஞானபாஸ்கரன்,
பிரோவ் கன்டி,
அப்துல் செறீப் சுபைர்,
ஏ.எப்.எம்.சிப்லி,
எம்.எச்.எம்.ஹக்கீம்,
ராஜநாதன் மயில்வாகனம்.

ஐக்கிய தேசியக் கட்சி:

அரசரெட்ணம் சசிதரன்,
அலோசியஸ் தம்பிமுத்து மாசிலாமணி,
தங்கராஜா சோமவாசன்,
ஏ.எல்.எம்.எனீஸ்,
திருநாவுக்கரசு சத்தியசீலன்,
காசுபதி பூபாலரத்னம்,
ஆறுமுகம் ஜீவகுமார்,
முனிதாச சிறிகாந்,
எல்.ரி.எம்.பர்ஹான்,
ஆறுமுகம் ஜெகன்,
ஏ.சி.றியாஸ்டீன்,
எம்.பி.எஸ்.சபீரா,
வி.எம்.முபாரக்,
பிதாம்பரம் காளிராஜா.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்:

ஏ.என்.செய்னுலாப்தீன்,
யு.எல்.எம்.நூருல் முபீன்,
ஏ.எஸ்.இஸ்மையில் முகமட்,
ஏ.எஸ்.ஜவாகிர் சாலி,
ஏ.எச்.எம்.சல்மா,
எம்.எம்.எம்.ராசீக்,
எப்.எம்.நசார்,
ஏ.எஸ்.எம்.சனூன்,
அலியார் நசீர்,
ஏ.அர்.பைரூஸ்,
ஏ.ஜீ.எம்.ஹசன்,
எச்.எம்.அப்துல் ஹாலி,
யு.எல்.ஜமால் தீன்,
ஏ.ஏ.முஹமட் சாலி.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com