இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Sunday, July 1, 2012

பயங்கரவாதத்தை துடைத்தெறிய கஜபா படையின் சேவை அளப்பரியது – கோட்டபய ராஜபக்ஷ.

நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை துடைத்தெறிவதற்கு கஜபா படையானது அளப்பரிய சேவை செய்துள்ளது என பாதுதாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ கொழும்பு மியூசியஸ் கல்லூரியில் நடைபெற்ற முதலாவது "கஜபா கலர்ஸ் நைற்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு மாத்திரமல்லமல், விளையாட்டை மேம்படுத்தவும் சேவையாற்றிய அவர்களின் அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு, மற்றும் கடுமையான பயிற்சி என்பனவற்றை நான் மெச்சுகின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கோட்டாபயவுடன் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரியவும் கலந்து கொண்டார். பல்வேறு விளையாட்டுகளில் திறைமை வெளிப்படுத்தியிருந்த 119 பேர் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.














0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com