6 மாதத்தில் இலங்கையை சேர்ந்த 1346 தமிழர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்
இந்த ஆண்டில் ஜூலை முதல் வாரம் வரை 1346 தமிழர்கள் அவுஸ் திரேலியாவுக்கு படகில் சென்றிருப்பதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளார்கள். அத்துடன் 2009 ல் 736 பேரும், 2010 ல் 536 பேரும் அங்கு இவ்வாறு சென்றிருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையை மையமாகக் கொண்டு பன்னாட்டு வியாபாரம் நடைபெறுவதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். இந்த நிலையில் கல்குடாவிலிருந்து படகில் அவுத்திரேலியவுக்குச் செல்ல ஆயத்தமாகியிருந்த அறுவரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
0 comments :
Post a Comment