3 கிலோ ஹெரோயினை வயிற்றில் மறைத்து வைத்து கடத்திய பாகிஸ்தானியர் மூவர் கைது.
3 கிலோ ஹெரோயின் போதை பொருளை வயிற்றில் மறைத்து வைத்து கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜைகள் மூவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மூவரும் ஹெரோயினை சூட்சுமமாக பொதி செய்து, விழுங்கிய நிலையில் ஹெரோயினை எடுத்துவந்துள்ளதாகவும், விமான நிலைய பொலிஸார் குறித்த மூவரையும் சோதனையிட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்து, ஹெரோயின்களை அகற்றியுள்ளதாகவும் தொவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைக்காக இவர்கள் கொழும்பு போதை பொருள் பொலிஸ் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் எனவும் 15 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தின் அடிப்படையில் இப்போதை பொருள் எடுத்து வரப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பெலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment