Friday, July 6, 2012

அராஃபட்டைக் கொன்ற அணுக்கதிர்வீச்சு நச்சுப்பொருள் 'பொலோனியம் 210'

1957ஆம் ஆண்டில் இஸ்ரேல் விஞ்ஞானிகள் பலர் புற்றுநோய் வந்து இறந்ததற்கும் இந்த பொலோனியம் நச்சு காரணமாக இருக்கக் கூடும் என்று இஸ்ரேல் எழுத்தாளர், மிசால் கார்பின் என்பவர் கூறினார். 2006ஆம் ஆண்டு ரஷ்ய உளவு ஏஜென்சியான கேஜிபி-யின் உளவாளி லிட்வெனென்கோ லண்டனில் கொலை செய்யப்பட்டபோது இந்த பொலோனியம் 210 என்ற நச்சுப்பொருள் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. ஆனால் அதற்கு முன்பே 2004ஆம் ஆண்டு பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபட் இந்த பொலோனியம் 210-என்ற நச்சுப்பொருளினால் கொல்லப்பட்டுள்ளார் என்ற ஐயம் தற்போது எழுந்துள்ளது.

அராஃபட்டின் மனைவி அவரது உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பரிசோதனை செய்ய கோரிக்கை விடுத்த்ள்ளார். ஏனெனில் சுவிஸ். விஞ்ஞானிகள் யாசர் அராபட் இறப்பதற்கு முன் அணிந்திருந்த உடையில் இதே பொலோனியம் நச்சுப்பொருளின் தடயங்கள் இருந்ததாகக் கூறியுள்ளது.

பொலோனியம் எத்தகைய அபாயமானது என்றால், சிறிய அளவில் இது நம் உடலுக்குள் சென்று ரத்தத்தில் கலந்தால் போதும் சொல்லமுடியாத உடல் உபாதைகளும் தாங்கமுடியாத பெரு வியாதிகளும் தோன்றும். இது மிகவும் அபாயகரமானது. ரேடியம் கண்டுபிடித்த மேடம் கியூரிதான் பொலோனியத்தின் கண்டுபிடிப்பாளர். இது ஒரு அணுக்கதிரியக்கப் பொருள். அணு உலைகளில் இது செயற்கையாகவே உற்பத்திச் செய்யப்படுகிறது. இதற்கு சில தொழிற்சாலை பயன்பாடுகளும் உண்டு.

இது மிகவும் அபாயகரமான ஒரு நச்சுப்பொருள். 1 கிராம் வெள்ளித்துகள் ஒருவரைக் கொலை செய்வதற்குப் போதுமானது என்றால் பொலோனியம் அதற்கும் மிகக்குறைவாக கொடுத்தாலே போதும் உயிர் போவது உறுதி. இதில் உள்ள ஆல்பா கதிரியக்க துகள்கள் லிவரை முதலில் காலி செய்யும், கிட்னியை அடுத்து காலி செய்யும். இதனால் இறந்த ரஷ்ய உளவாளிக்கு வாந்தி, குமட்டல், முடி உதிர்தல், தொண்டை வீக்கம், உடல் நிறம் வெளிறிப்போதல் இதெல்லாம் இதன் தோற்ற அறிகுறிகளாகும்.

யுரேனியத்திலிருந்து இந்த அணுத்துகள் துணைப்பொருளாக உற்பத்தியாகிறது. அல்லது அணுத்துகள் ஆக்சிலரேட்டரிலிருந்து இது உற்பத்தியாகும்.

ரஷ்ய ஏஜென்ட் கொலை வழக்கில் பணியாற்றிய பிரிட்டன் கதிரியக்க நிபுணர் ஜான் கிராஃப்ட் இது பற்றிக் கூறுகையில், பொலோனியம் நிச்சயம் அரசின் உதவியில்லாமல் ஒருவரது கைக்குச் செல்ல வாய்ப்பில்லை. ரஷ்யாவில் உள்ள அணு உலையிலிருந்து பொலோனியம் வந்திருக்கவேண்டும், அராபட் விவகாரத்தில் இஸ்ரேல் இந்த வேலையைச் செய்திருக்கலாம் என்று கூறுகிறார்.

பொலோனியத்தை எளிதில் நாடு விட்டு நாடு கடத்தலாம் இதனைக் கண்டுபிடிக்கமுடியாது. இதனை ஒரு புண் வழியாகவோ, அல்லது உள்ளிறுஞ்சும் படியாகவோ செய்து விட முடியும். ஆனால் உறுதியான முறை ஒருவர் அருந்தும் உணவில் கலந்து கொடுப்பதுதான் நடைமுறை. லண்டன் விடுதியில் ரஷ்ய உளவாளி ஒரு ஆடம்பர ஹோட்டலில் தேநீர் அருந்தினார். அதில் பொலோனியம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

லிட்வினென்கோ கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் பிரிட்டன் வழக்கறிஞர்கள் முன்னாள் கே.ஜி.பி. ஏஜெண்ட் ஆந்த்ரீ லகோவாய் என்பவரை முதன்மை குற்றவாளி என்று சந்தேகித்தது, ஆனால் ரஷ்யா அவரை ஒப்படைக்க மறுத்தது.

இதனைக் கண்டுபிடித்த விஞ்ஞானி மேடம் கியூரியின் மகள் ஐரீன் லுகேமியா என்ற கேன்சர் நோய் வந்து இறந்தார். அவர் இந்த பொலோனியக் கதிர்வீச்சின் பாதிப்பினால் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

1957ஆம் ஆண்டில் இஸ்ரேல் விஞ்ஞானிகள் பலர் புற்றுநோய் வந்து இறந்ததற்கும் இந்த பொலோனியம் நச்சு காரணமாக இருக்கக் கூடும் என்று இஸ்ரேல் எழுத்தாளர், மிசால் கார்பின் என்பவர் கூறினார். ஆனால் இஸ்ரேலிய அதிகாரிகள் இந்தத் தொடர்பை எப்போதும் மறுத்தே வந்துள்ளனர்.

தற்போது அராஃபட்டைக் கொன்றதும் இந்த பொலோனியம் என்ற நச்சுக் கதிர்வீச்சுத் துகளே என்று கூறப்படுகிறது. தற்போது அவரது உடலைத் தோண்டி எடுத்து பரிசோதிப்பதுதான் சரியான அணுகுமுறை என்றாலும் இத்தனை ஆண்டுகள் கழித்து அதன் கதிர்வீச்சுத் தன்மை இன்னமும் இருக்குமா என்றும் ஐயப்படுகின்றனர் விஞ்ஞானிகள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com