Thursday, June 7, 2012

பல்கலைக்கழக பகிடிவதைகள் காணொளி வெளியானமை ஏற்படுத்தியுள்ள தாக்கம் video

போராதனை பல்கலைக்கழக வளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பகிடிவதைகள் கொண்ட வீடியோ காட்சிகள் அண்மையில் தொலைக் காட்சி செய்தி அறிக்கைகளில் காண்பிக்கப்பட்டன.

இதனை அடுத்து, பகிடிவதை விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பெற்றோர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர், அவர்களிடையே பகிடிவதைகள் குறைந்து விடும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்பி.திசாநாயக்க முன்னர் தெரிவித்திருந்தமை தற்போது கேள்விக்குரியதாகியுள்ளது.

இதேவேளை, பகிடிவதைச் சம்பவங்கள் குறித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்,மாணவிகள் இருபது பேரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தப் பகிடிவதை போராதனை பல்கலைக்கழக வளவில் இடம்பெற்றுள்ளதாகவும் அதன் வீடியோ காட்சிகள் சீஐடி மற்றும் ஊடகங்களுக்குச் சென்றது எப்படி? என்பது குறித்த மாணவர்கள் கலக்கத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதைக்கு உள்ளான புதிய மாணவர்,மாணவிகள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்களிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தக் காணொளியை பாருங்கள்-

1 comments :

Anonymous ,  June 7, 2012 at 6:06 PM  

Absolutely horendous.It's really shame to the universities of Srilanka.Why not the heads of the universities,police or human rights activists taking any precautions to stop this tosh and save the new comers from this university violence
created by a handful of unruly elements who come from a rotten ....?.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com