ஜயலத் எம்.பி.யிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணை
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர் தனவிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று புதன்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர்.
கோட்டையில் அமைந்துள்ள தேசிய சேவைச் சங்கத்தின் தலைமையகத்தில் வைத்து இந்த விசாரணை நடத்தப்பட்டதாக ஜயலத் எம்.பி.யின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பு, புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்துக்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
0 comments :
Post a Comment