Sunday, June 10, 2012

வெலிக்கடை , போகம்பரை சிறைச்சாலைகளில் தொலைபேசிகளும் போதைப்பொருளும் கைப்பற்றல்

வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவக்கையின் போது 11 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது கைதிகள் பயன்படுத்தி வந்த கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் உதவி புரிந்துள்ளனர் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

. இதேவேளை, ஆயுள்தண்டனைக் கைதியொருவரின் உடம்பினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஐந்து கிராம் ஹெரோயின் போதைப்பொருளை நேற்று சனிக்கிழமை இரவு கண்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கண்டி, போகம்பரை சிறைச்சாலையிலுள்ள ஆயுட்தண்டனைக் கைதியொருவரே தனது மலவாயிலில் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்துவைத்திருந்துள்ளார்.

வழக்கு விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் மீண்டும் போகம்பரை சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டபோது, கைதியொருவரிடம் போதைப்பொருள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கண்டி நீதவானின் அனுமதியுடன் பொலிஸார் போகம்பரை சிறைச்சாலையில் சந்தேகத்திற்குரிய இரு கைதிகளை சோதனைக்கு உட்படுத்தியபோது கைதியொருவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com