2012 தேர்தல் இடாப்பு திருத்தம் தொடர்பில் அவதான த்துடன் இருங்கள்- தேர்தல்கள் திணைக்களம்
2012 தேர்தல் இடாப்பு திருத்தம் தொடர்பில் அவதானத்துடன் இருக்கு மாறும், வாக்குரிமையை பாதுக்காக் குமாறும், தேர்தல்கள் திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
2012 ஆம் ஆண்டிற்கான வாக்காளர்களர் இடாப்பு மதிப்பீட்டுப்பணிகள் கடந்த முதலாம் திகதி ஆரம்பமானது. எதிர்வரும் 15 ஆம் திகதி வரை வாக்காளர்கள் மதிப்பீடு தொடர்பான மாதிரி விண்ணப்பபடிவம் ஒன்று கிராம சேவகர் மற்றும் தேர்தல் மதிபீட்டு அதிகாரிகளால் நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் மாதிரி படிவங்கள் கிடைக்காத வீட்டு உரிமையாளர்கள் தமது கிராம சேவகர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இது தொடர்பாக அறிவிக்குமாறு தேர்தல் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவத்தை எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் ஒப்படைக்குமாறு தேர்தல் செயலகம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment