புதுப்பிக்க கூடிய மின்வலுவால் 20 ஆண்டுகளில் 10 பில்லியன் சேமிக்கலாம்.
இலங்கையில் புதுப்பிக்கக் கூடிய மின் வலுவின் ஊடாக அடுத்த 20 ஆண்டுகளில் 100 பில்லியன் யூரோக் களைச் சேமிக்க முடியும் என ஜெனரல் பிதீப் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
சூரிச் மற்றும் ஜெனிவாவில் "இலங்கை - ஆயிரத்தொரு வாய்ப்புள்ள நாடு"என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற முதலாவது இலங்கை-சுவிஸ் வரத்தக மற்றும் முதலீட்டு மாநாடடில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சுவிசிலுள்ள இலங்கைத் தூதரகம், சுவிஸ்-ஆசிய வர்த்தக சபை, சுவிசின் கைத்தொழில், சேவைகள் மற்றும் வர்த்தக இணையம் ஆகியன, ஹொல்சிம் குரூப் அன்ட் கிறடிட் சுவிசின் ஹொல்சிம் லிமிட்டெட்டின் ஆதரவுடன் நடாத்திய இம்மாநாடடில் 130 ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டனர்.
இம்மாநாடடிற்கு தூதுவர் சரத் கொங்காகே மற்றும் கொன்சல் ஜயவர்தன ஆகியோர் தலைமை தாங்கியதுடன், தொழிலமைச்சர் காமினி லொக்குகே, சுவிஸ்-ஏசியா வர்த்தக சபை இலங்கைத் தலைவர், மற்றும் உறுப்பினர்கள், இலங்கையிலிருந்து சென்ற அலுவலர்கள் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment