Saturday, June 30, 2012

10 மாணவர்கள் மீது பாலியல் துஸ்பிரயோகம். அதிபர் கைது.

பாடசாலை மாணவிகள் 10 பேர் மற்றும் மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் திவுலபிட்டிய பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. அந்த பாடசாலையில் கல்வி கற்கும் 5 வயது தொடக்கம் 10 வயதிற்கு உட்பட்ட மாணவர்களையே பாடசாலையின் அதிபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் திவுலபிட்டிய பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த பாடசாலை அதிபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com