காதலரின் ஆணுறுப்பை கடித்து துண்டாக்கினார் காதலி!
மூவரின் ஆணுறுப்பை வெட்டிய விபச்சாரியை தேடி பொலிஸார் வேட்டை
மாத்தறையில் சிகையலங்கார கலைஞர் ஒருவரின் ஆணுறுப்பை அவரின் காதலி கடித்து துண்டியாக்கிய நிலையில், அதே மாவட்டத்தில் மூன்று ஆண்களின் ஆணுறுப்பை வெட்டியதாக கூறப்படும் விபசாரி ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஆண்கள் நால்வரும் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்படி சிகையலங்கார கலைஞருக்கும் அவரின் காதலிக்கும் இடையில் பண விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து அந்நபரின் ஆணுறுப்பை அவரின் காதலி கடித்து துண்டாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி நான்கு சம்பவங்களுக்கும் தொடர்புள்ளதா என அறிவதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
1993 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஜோன் பாபிட் என்பவரின் ஆணுறுப்பை அவரின் மனைவி லொரினா வெட்டித் துண்டாக்கியமை பரபரப்பான செய்தியாகியது. தான் நீண்டகாலமாக உடல் மற்றும் உளவியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளானதாக லொரினா பின்னர் கூறியிருந்தார். (சண்டே டைம்ஸ்)
0 comments :
Post a Comment