இந்தியா நமது பொருளாதாரத்தைக் கொள்ளை அடிக்கின்றது... குமுறுகிறார் கலாநிதி வசந்த
‘இந்தியா இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கொள்ளை அடிக்கின்றமை இப்போது தெளிவாகத் தெரின்றது. அவர்கள் இந்த நாட்டுக்கு பொருளாதார அழுத்தத்தைக் கொடுப்பதில் வெகுதூரம் முன்னேறிச் சென்றுள்ளனர். திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை விக்கிரமசிங்கவின் காலத்தில் கைப்பற்றிக் கொண்ட இந்திய எண்ணெய்க் கம்பனி இந்த நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் கைப்பற்றிக் கொள்ள கடும் முயற்சி செய்கின்றது. இங்கு காணியுரிமை இல்லாத அவர்கள் எண்ணெய் களஞ்சியப்படுத்துவதற்கு நிதி முதலீடு செய்து இந்த நாட்டின் எண்ணெய்க் களஞ்சியங்களுக்கு எண்ணெய் பகிர்ந்களிக்கும் திறப்பைத் தங்கள் கையில் எடுத்துள்ளனர். இதிலிருந்து, இந்த நாட்டின் மின்வலுத் துறையானது அவர்களின் கைளில்தான் தங்கியுள்ளது என்பது தெளிவாகின்றது’ என்று தேசாபிதைசி தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார கூறுகின்றார். கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
சீபா உடன்படிகையூடாக தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போன இந்தியா, அதிலிருந்து வேறுபடாத ஆனால் அதைவிட விரிவான வர்த்தக சேவையான ‘சாட்டிஸ்’ உடன்படிக்கையை இலங்கையுடன் ஏற்படுத்திக் கொண்டது. இது இந்த நாட்டின் பொருளாதார நன்மையை தான் பெற்றுக் கொள்வதற்கான சூசகமான நோக்கம் அல்லவா என்று வினவினார்.
‘சாட்டிஸ்’ என்பது தென்னாசிய வலயத்துகானது என்று கூறப்பட்டாலும் அது இருநாடுகளுக்கு இடையிலான உடன்டிக்கையே. அதில் இலாபம் சமமாகப் பகிரப்படவில்லை. உடன்படிக்கையின் படி இந்தியாவுக்கு 5000 மிலியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இலாபம் கிடைக்கும். ஆனால், இலங்கைக்கு கிடைப்பது வெறும் 300 மிலியன் அமெரிக்க டொலர் மட்டுமே. இதற்கான பேச்சுவார்த்தைகளின் போது இந்தியா சார்பில் பலமானவர்களும் இலங்கை சார்பில் முதுகு வளைந்தவர்களும் கலந்துகொள்கிறார்கள். இதனால் இந்தியா தனக்கேற்றவாறு செயல்படுத்தி விடுகின்றது என்று அவர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment