Friday, May 11, 2012

எனக்கு துரோகம் செய்து விட்டு மற்றொருவரை காதலித்ததால் கழுத்தை அறுத்தேன்- கொலையாளி

"குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப் பட்டார் சமன்ஜாட் சிங்".

அவுஸ்ரேலியா மெல்போர்ன்னில் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற இந்தியாவை சேர்ந்த சமன்ஜாட் சிங். என்பவர் அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

24 வயதுடைய பஞ்சாபை சேர்ந்தவர் சமன்ஜாட் சிங், என்பவருக்கும் மான் ப்ரீத் கவுர், (28வயது) என்பவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணமானம் நடந்தது. திருமணத்தின் பின்னர் இருவரும் அவுஸ்ரேலியா சென்றுள்ளனர். மனைவியின் மாணவர் விசாவிலே சமன்ஜாட் சிங் அவுஸதிரேலியா சென்றுள்ளார்.

இன் நிலையில் மான் ப்ரீத் கவுருக்கு மற்றொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை சமன்ஜாட் சிங் பலமுறை கண்டித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி, மான் ப்ரீத் கவுரை கழுத்தை அறுத்து சமன்ஜாட் சிங் கொன்றுள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை, நியூசவுத் வேல்ஸ் மாகாண நீதிமன்றத்தில் நடந்த போது சமன்ஜாட் சிங் குறிப்பிட்டதாவது 'எனது தாய், தந்தையர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தான், மான் ப்ரீத் கவுரை ஆஸ்திரேலியாவுக்கு படிக்க அனுப்பி வைத்தனர். அவர்களையே எனது மனைவி அவமானப்படுத்தினாள். அதுமட்டுமல்லாது, எனக்கு துரோகம் செய்து விட்டு மற்றொரு நபரை காதலிப்பதாக கூறினாள். இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் அவளது கழுத்தை அறுத்தேன். கொலை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் எனக்கு இல்லை என,சமன்ஜாட் சிங் கோர்ட்டில் தெரிவித்தார்.

வார்த்தையாலேயே சிங்கை, கவுர் பலமுறை துன்புறுத்தியுள்ளார். பொறுமை இழந்த சிங், ஒரு கட்டத்தில் மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார் என, சிங் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து சிங், கொலை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும் மனைவியின் கழுத்தை அறுத்த காரணத்தால், கவுர் கடைசியில் இறந்துள்ளார்.

இந்த குற்றத்துக்காக, அவருக்கு எந்த விதமான தண்டனை என்பது குறித்து, வரும் 24ம்தேதி கோர்ட் அறிவிக்க உள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com