வர்த்தக நிலையத்தில் கொள்ளையிட முற்பட்ட மூவர் மடக்கி பிடிப்பு.
குளியாபிட்டிய பகுதியில் வர்த்தக நிலையமொன்றிலிருந்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட மூவரை, 24 மணித்தியாலங்களுக்குள் பொலிஸார் கைது செய்தனர். குளியாபிட்டி நகரில் வர்த்தக நிலையமொன்றிலிருந்து 33 பவுன் எடையுள்ள தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு தப்பிச்சென்ற போதே, இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களின் பெறுமதி 17 லட்சம் ரூபாவென, குளியாபிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு முச்சக்கர வண்டிகளும், மோட்டார் சைக்கிளொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்கள், குருநாகல், பன்னல மற்றும் கட்டுபொத்த ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்களாவர். பிரதான சந்தேக நபர், 17 வருடங்களாக அந்த வர்த்தக நிலையத்தில் சேவையாற்றியுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர். குளியாபிட்டிய பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாநாயகவின் ஆலோசனைக்கமைய, சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
0 comments :
Post a Comment