மூக்குடைபட்டார் ராயப்பு யோசப்.
தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரம் அரசியல் மயமாக்கப்பட்டு முஸ்லிம் அமைப்புக்கள் பல பிரிவுகளாக பிளவுபட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட விடயத்தில் மூக்கை நுழைக்க முயன்ற மன்னார் மறை மாவட்ட ஆயர் ராயப்பு யோசப் மூக்குடைபட்டுள்ளார்.
இன்று காலை மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரகசிய ஒன்று கூடல் ஒன்று ஆயர் ராயப்பு யோசப் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இவ்ரகசிய ஒன்றுகூடலில் இந்து மத மற்றும் கிறிஸ்த்தவ மதகுருக்களுடன் மன்னார் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர். இச்சந்திப்பில் தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரம் பேசப்பட்டதுடன் விடத்தினை கண்டித்து ஏதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படவேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆயர் ராயப்பு யோசப்பின் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு இணங்க மன்னார் முஸ்லிம் மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் இது விடயத்தில் எவ்வித ஆர்ப்பாட்டங்களையும் தாம் செய்யப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு வன்செயல் அற்ற முறையில் தீர்வுகளை காணவேண்டும் என போதிக்க கடமைப்பட்டுள்ள மதகுருக்கள் கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு மக்களை தூண்டுவது மக்களை மேலும் சிக்கலுள் தள்ளும் செயல் என புத்திஜீவிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மறைமாவட்ட ஆயர் ஒருவர் பிற சமயம் ஒன்றின் விடயத்தில் மூக்கை நுழைத்து அம்மக்களை கிளர்ச்சியில் ஈடுபடத்தூண்டுவதன் பின்னணி பற்றியும் மக்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர். இரு சமயங்களை மோதவிட்டு அதில் குளிர்காய எடுக்கும் முயற்சியா எனவும் அவர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment