கிண்ணியாவில் நிலத்திலிருந்து புகை ஏன் வெளியானது? அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படும்.
திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் குழியொன்றிலிருந்து வெளியான புகை தொடர்பில், புவிச் சரிதவியல் அகழ்வுப் பணியகம், மேற் கொண்ட ஆய்வின் இறுதி அறிக்கை, இன்று கையளிக்கப் படவுள்ளது. புவிச் சரிதவியல் அகழ்வுப்பணியகத்தின் தலைவர் கலாநிதி என்.பீ. விஜயானந்தவின் பணிப்புரைக்கமைய, இவ் ஆய்வில் விசேட குழு ஒன்று ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
கிண்ணியா பிரதேசத்தில் உள்ள சுடுநீர் கிணறுகளின் செயற்பாடுகள் மற்றும் குப்பை கூளங்களினாலும், இந்நிலைமை ஏற்பட்டிருக்கலாமென, நம்பிக்கை வெளியிட்டுள்ள புவிச்சரிதவியல் அகழ்வுப் பணியகம், இது எக்காரணம் கொண்டும் எரிமலை வெடிப்புகள் போன்ற செயற்பாடுகளினால் இடம்பெறவில்லையென்றும், வலியுறுத்தியுள்ளது.
இவ்வறிக்கையின் மூலம், புகை வெளிவந்தமைக்கான காரணம் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும், புவிச்சரிதவியல் அகழ்வுப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment