சரத்பொன்சேகாவுக்கு நாளை விடுதலை - அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா
முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவுக்கு நாளை விடுதலை கிடைக்கும் என பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவத்தன தெரிவித்துள்ளார்.
நாளையதினம் சரத்பொன்சேகாவின் சட்டத்தரணிகளால் நீதிமன்றில் கருத்துக்களும், விளங்கங்களும்,அளிக்கப்பட்டதன் பின்னர் அவருக்கான விடுதலை வழங்கப்படும் என பதில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இதேவேளை, தமது தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சிக்குள் இணைந்து கொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான யோசனையொன்றை நாளைய தினம் கூடவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாளைய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சரத்பொன்சேகாவின் விடுதலை, அவருடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கைகள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment