Thursday, May 17, 2012

கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

கல்விப் பொதுத்தராதர உயர்தர கல்வி நடவடிக்கைகளுக்காக தேசிய பாடசாலை ஒன்றிலிருந்து, மற்றுமொரு தேசிய பாடசாலைக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவதை தடுக்கும் வகையில், கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய குறித்த சுற்றறிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

ஒருசில காரணங்களுக்கான அதிக பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளும் மாணவர்களை தமது பாடசாலைகளில் உயர்தரத்திற்காக இணைத்துக்கொள்வதற்கு அதிபர்கள் விரும்புவதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர், மாணவர்களும், பெற்றோர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்கியமையால், அது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com