பொறுமையைக் கடைபிடிக்கப் பழகினால் எந்தவொரு சவாலையும் வெல்லலாம்- ஜனாதிபதி
பௌத்த தர்மத்தில் கூறப்பட்டுள்ள பொறுமையைக் கடைக்கப் பழகிக் கொண்டால் எந்தவொரு சவாலையும் வெற்றிகொள்ள முடியும் எனவும், உலகில் மிகக்கொடிய பயங்கர வாதத்தைத் தோற்கடித்த சந்தர்ப் பத்தில்கூட பொறுமையுடன் செயல்பட்ட தருணம் முக்கியத்தும் வாய்ந்ததாக இருந்தது, என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2600 ஶ்ரீ சம்முத்த ஜயந்தி வருட பூர்த்தியை முன்னிட்டு அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துதெரிவிக்கையில், பொறுமை யினாலேயே ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வரலாறுடைய பல்வேறு விடயங்களை உருவாக்க முடிந்தது.
குரோத உணர்வுகளை தூண்டும் வகையில் எவரும் செயற்படக் கூடாது. புத்திசாதூ ரியமாகவும், பொறுமையுடனும், செயற்படுவதன் மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment