பொன்சேகாவுக்கு மருத்துவம் செய்ய முடியாது என்கின்றார் மருத்துவர்.
புதியதொரு நிகழ்ச்சித் திருப்பத்தில், முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகாவை தேசிய மருத்துவமனைக்கு மாற்றும்படியான நீதிமன்ற ஆணையைத் தொடர்ந்து, சரத் பொன்சேகாவின் மருத்துவர் அவருக்கு மருத்துவம் செய்ய மறுத்துவிட்டார். சிறைச்சாலை அதிகாரிகள் சரத் பொன்சேகாவை நவலோக மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்வதற்கான கொழும்பு மேல்நீதிமன்ற ஆணையை மே 4-ம் திகதி பெற்றதை தொடர்ந்தே அவர் இந்த மறுப்பினை தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள சில அலுவலர்களால் முன்னாள் ஜெனரலின் உயிருக்கு ஊறு விளைவிக்க தொடர்ச்சியான சதிமுயற்சி இடம் பெற்று வருவதாக முனாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
சிறைச்சாலை ஆணையர் அசோகா ஹப்புவாராச்சி மேல்நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ முன்னிலையில் நேரில் தோன்றி, முன்னாள் ஜெனரலுக்கு முழுப் பாதுகாப்பு வழங்குவதற்கு தங்களால் இயலாதிருப்பதனால் ஒரு இடமாற்றல் ஆணை வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.
நவலோக மருத்துவமனை, எந்தவித கட்டுப்பாடமின்றி பார்வையாளர்களைப் பார்க்கச் செல்ல பொது மக்களை அனுமதிக்கின்றது. அத்தகைய சூழ்நிலையில், சிறைக்காவலர்களால் சரியான பாதுகாப்பை வழங்க முடியாது. அதனால், கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு இடமாற்றம் வழங்குமாறு தான், நீதிமன்றத்தைக் கோருவதாக அவர் மேலும் நீதிமன்றில் கூறினார்.
தான் தேசிய மருத்துவமனைக்கு நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யச் செல்வதில்லை என்றும் கொள்கை அடிப்படையில் நவலோகவில் மட்டுமே என்றும் முன்னாள் தளபதிக்கு மருத்துவம் செய்யும் சிறப்பு மருத்துவர் (ளுpநஉயைடளைவ னுச.) வஜிர தென்னக்கோன் கூறுகிறார்.
முன்னாள் தளபதியை தேசிய மருத்துவமனைக்கு மாற்றம் செய்வதை மிகவும் விரும்பாதவராகக் காணப்படுகின்றார் தென்னக்கோன். 'இந்த இடமாற்றமானது நோயாளிமீதான மிகச் சிறந்த அக்கறைனால் அல்ல. இது ஆபத்தானது' என்று அவர் கூறினார்.
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள சில அலுவலர்களார் முன்னாள் ஜெனரலின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் சதிமுயற்சின் விளைவே இது என்பது அனோமா பொன்சேகாவின் வாதமாகும்.
' வஜிர தென்னக்கோன் போன்ற ஒரு தகைமைசார் சிறப்பு மருத்துவரை தேசிய மருத்துவமனையில் பெற முடியாது. அவர் தேசிய மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருத்துவம் செயவதில்லைல' என்றார் அனோமா.
மே 9-ம் திகதி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா, ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழாத்தை சிறப்பாக நியமித்திருக்கும் நிலையிலேயே, சிறைச்சாலை அதிகாரிகள் இந்த ஆணையை வேண்டியிருந்தனர்.
0 comments :
Post a Comment