இலங்கையில் உக்ரேன் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய லிந்துவேனிய பிரஜை கைது.
உக்ரேன் நாட்டு பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய லித்துவேனிய நாட்டுப் பிரஜை ஒருவர் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். லித்துவேனிய பிரஜை சுமார் 8 வருடங்களாக இந்த விபசார தொழிலில் ஈடுபட்டு வருகிறார் என தகவல்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செவ்வாய் இரவு வெள்ளவத்தை பகுதியில் உள்ள தற்காலிக தங்குமிடமொன்றில் இருந்து இந்த நபரைக் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
விபசாரத்தில் ஈடுபட்ட உக்ரேன் நாட்டு பெண்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள நிர்வாகப் பிரிவின் ஆலோசனைக்கு அமைய கைது செய்யப்பட்ட லித்வேனிய பிரஜையும் உக்ரேன் நாட்டு பெண்களும் நாடு கடத்தப்படவுள்ளனர்.
0 comments :
Post a Comment