எரிபொருள் விலை குறைக்க சாத்தியமாம்.
உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் உற்பத்திகளின் விலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நிலைமை அடுத்துவரும் ஆறுவார காலத்திற்கு தொடருமானால் இலங்கையிலும் எரிபொருளின் விலையை குறைக்க முடியுமென பெற்ரோலியத்துறை அமைச்சு தெரிவிக்கிறது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது அதனை அதிகரிப்பதாகவும் உலக சந்தையில் அதன் விலை குறையும்போது இலங்கையில் உள்ள பாவனையாளர்களுக்கு அதன் வரப்பிரசாதங்கள் வழங்கப்படுவதில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்த குற்றச்சாட்டை அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்ததும் இலங்கையிலும் எரிபொருளின் விலையை உடனடியாக அதிகரிக்க அரசாங்கம் ஒருபோதும் செயற்பட்டதில்லை என அமைச்சு கூறுகிறது.
கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து உலக சந்தையில் பல தடவைகள் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட போதும் கடந்த பெப்ரவரி மாதத்திலேயே எரிபொருளின் விலை இலங்கையில் அதிகரிக்கப்பட்டதாக அமைச்சின் அறிக்கையொன்று சுட்டிக்காட்டுகிறது.
0 comments :
Post a Comment