Monday, May 7, 2012

கிளிநொச்சி அக்கராயன்குள, அபிவிருத்தி பணிகளை பார்வையிடடார் ஜப்பானின் பிரதி பிரதமர்

 ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியவதை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதி பிரதமர் கட்சுயா ஒக்கடா கிளிநொச்சியில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் அபிவிருத்தி செய்யப்பட்டு அக்கராயன்குளத்தை பார்வையிட்டார்.

இக்குளத்தின் புனர்நிர்மாண பணிகள் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வருடம் ஒக்டோபர் மாதம் இப்பணிகள் பூர்த்தியடையவுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையிலும் ஜப்பான் அரசின் நிதியுதவியிலும்  இடம்பெற்று வரும் இப்புனரமைப்பு பணிகளுக்கு 350 மில்லியன் ரூபா செலவாகுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

 இக்குள புனரமைப்பு பணிகளை  அவதானிக்கும் இலங்கையில் ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் வசந்த கரன்னாகொட, அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா வட மாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரிசிறி, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com