சாப்பிட்ட தட்டில். மீதம் வைத்தால் அவர்களுக்கெதிராக அபராதம்
பிரிட்டனில் சவுத் ஷீல்ட்ஸ் பகுதியில் சீன ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலில் சாப்பிடுபவர்கள் சாப்பிட்ட தட்டில் உணவு பொருட்களை மீதம் வைத்தால் அவர்களுக்கு 20 பவுண் வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது.
முன்னதாக இந்த ஹோட்டல் சர்வர்கள் சாப்பிட வருபவர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்து விடுகின்றனர். சாப்பாட்டை மீதம் வைத்தால் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது. இதை மீறி சாப்பிட்ட தட்டில் உணவை வீணாக்குபவர்களுக்கு உணவு கட்டணத்துடன் அபராதமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. சாப்பாடு பிடிக்காமல் மீதம் வைத்த பலரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டதால், அவர்கள் இந்த ஹோட்டல் நிர்வாகத்தை திட்டி விட்டு செல்கின்றனர்.
0 comments :
Post a Comment