Saturday, May 26, 2012

வீட்டிற்குள் சிக்கிய 400 கிலோ எடை குண்டு பெண்: சுவரை இடித்து வெளியேற்றம்

இங்கிலாந்தின் மிகவும் குண்டான பெண் ஜியார் ஜியாடேவிஸ் (19), 400 கிலோ எடையுள்ள இவர் சவுத் வேல்ஸ்சில் தங்கியுள்ளார். அதிக உடல் எடை காரணமாக இவரால் தனது அன்றாட பணிகளை செய்ய முடியவில்லை. வெளியே நடமாட முடியாததால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். ஆனால், அவரால் எழுந்து நடக்க முடிவில்லை.அதே நேரம் வெளியே தூக்கி வரவும் முடியவில்லை.

ஏனெனில் பருமன் காரணமாக அவரது உடலை வெளியே கொண்டுவர முடியவில்லை. எனவே, அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதை தொடர்ந்து 40 தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து அவரை வெளியே மீட்க முயன்றனர் முடியவில்லை. இறுதியில் வீட்டின் சுவரை இடித்து அவரை வெளியே கொண்டு வந்தனர். அதற்காக கட்டிட தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டின் 2 சுவர்களை இடித்து தூக்கி வந்து ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com