போருக்குப் பின்னர் படையை விட்டோடிய 36,400-க்கு மேற்பட்டரை இலங்கை கைது செய்திருக்கிறது.
மூன்று தசாப்த கால உண்ணாட்டுப் போரின் முடிவைத் தொடர்ந்து, இராணுவத்தை விட்டோடிய 36,400-க்கு மேற்பட்ட படைவீரர்களை இலங்கை கைது செய்திருப்பதாக, இராணுவ பேச்சாளர் ருவன் வணிக்கூரிய தெரிவித்துள்ளார்.
2012-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 25,000-க்கு மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள் கைது செய்யப்பட்டு இராணுவச் சட்டத்தின்படி நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டார்கள் என்று இராணுவ பேச்சாளர் ருவன் வணிக்கூரிய குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு தசாப்தங்களில், ஏறக்குறைய 65,000 படைவீரர்கள் இராணுவத்தை விட்டோடி இருக்கிறார்கள். அத்துடன் 2009-ல் போரின் முடிவில் இருந்து, அவர்களில் 36,400-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 'மேலும் ஆயிரம் பேர் கைது செய்யப்ப்பட வேண்டும். தப்பியோடும் இவர்கள் நாட்டின் இராணுவத்துக்கு ஒரு நிர்வாகச் சுமையாக மாறியிருக்கிறார்கள்' என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இராணுவம் 200,000 ஒப்புதலளிக்கப்பட்ட ஆளணியினரைக் கொண்டிருக்கிறது. ஆனால், எண்ணிக்கையைப் பேணுவதற்கு இவ்வாறு இராணுவத்தை விட்டோடுபவர்கள் ஒரு பிச்சினையாக இருக்கிறார்கள்.. ' 2009 மே மாதம் போர் முடிவுற்றதைத் தொடர்ந்து, இந்த விட்டோடிகளுக்கு மீண்டும் வந்து தமது கோப்புகளை சரிசெய்து கொண்டு உத்தியோக பூர்வமாக இராணுவத்தில் இருந்து விலகிச் செல்வதற்குப் பல வாய்ப்புகளை நாங்கள் வழங்கி இருந்தோம்' என்றும் வணிகசூரிய தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஓரிரண்டு மாத குறுகிய காலம் வருகை தராதோர் ஒரு சுருக்க விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டும்.எனவும் நீண்ட காலம் வருகை தராதிருப்போர் இராணுவச் சட்டப்படி இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் நெல் அறுவடை செய்யும் காலத்தில், நாட்டுப் புறக் குடும்பங்களில் இருந்து வந்த பெரும்பாலான இராணுவ வீரர்கள், இராணுச் சேவையை புறந்தள்ளி விட்டு நெல் வயல்களில் தமது குடுபத்தினருக்கு உதவி செய்து வருவதாக அறியக் கிடக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment