பண்டிகை கால உணவுக் கொள்வனவு தொடர்பில் அவதானத்துடன் செயற்படுக-சுகாதார சங்கம்
பண்டிகை காலத்தில் கொள்வனவு செய்யப்படும் உணவு பண்டங்கள் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் நுகர்வோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் இலங்கை முழுவதிலும் உணவு பண்டங்களின் தரத்தை சோதனையிடும். நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அண்மையில் இடம்பெற்ற சுற்றி வளைப்புக்களின் போது பாவணைக்கு பொருத்தமற்ற காலாவதியான பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார பரிசோதகர்களின் சங்கம தெரிவித்துள்ளது.
உணவு பண்டங்களை கொள்வனவு செய்யும் போது காலாவதியாகும் தினம் மற்றும் உற்பத்தி செய்யப்படும் தினம், தரச்சான்றிதழ் போன்றன தொடர்பாக அவதானம் செலுத்தும்படி இச்சங்கம் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment