Saturday, April 14, 2012

யாழ். பலாலி வீதியிலுள்ள கிணற்றிலிருந்து இரு சகோதரிகளின் சடலங்கள் மீட்பு.

யாழ். பலாலி வீதியிலுள்ள கிணற் றிலிருந்து இரு சகோதரிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர. யாழ். கொட்டடி நமசிவாய பாடசாலையில் ஆங்கிலப் பாட ஆசிரியரியையாக பணிபுரியும் சங்கரப்பிள்ளை சாளினி (கீதாஞ்சலி), என்பவரும் அவரது சகோதரியான யாழ்.கொக்குவில் பாடசாலையில் ஆங்கிலப் பாட ஆசிரியரியையாக பணிபுரியும் சங்கரப்பிள்ளை தனுஜா (சொர்ணலதா) ஆகிய இரு இளம் சகோதரிகளே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களது சடலம் பொலிஸாரினால் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பாக யாழ்..பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com