குடும்ப வறுமை தாங்காமல் இளம் தாய் நஞ்சருந்தி தற்கொலை
யாழ். வேலணை புளியங்கூடல் பகுதியில் குடும்ப வறுமை காரணமாக மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.யாழ்.வேலணை புளியம் கூடல் பகுதியைச் சேந்த கிருஸ்ணராசா காஞ்சனா (வயது 31) என்ற மூன்று பெண் பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு நஞ்சருந்தி உயிரிழந்துள்ளதாக யாழ். ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏழ்மைநிலை காரணமாக மிகவும் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட இவர் புகையிலைக்கு பாவிக்கும் கருமிநாசினி மருத்தை குடித்து மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நஞ்சருந்தி உயிரிழந்த குடும்பப் பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஊர்கவற்துறை பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பாக் விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
0 comments :
Post a Comment