தெற்கு சூடான்மீது சூடான் சரமாரி குண்டுவீச்சு: முழு போர் ஏற்படும் அபாயம்
சூடான் நாட்டில் இருந்து தெற்கு சூடான் கடந்த ஆண்டு தனிநாடாக பிரிந்தது. அதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பிரச்சினை காரணமாக மோதல் நடந்து வருகிறது. இரு நாட்டு எல்லையில் ஹெக்லிக் என்ற பகுதி உள்ளது. இங்கு ஏராமளான எண்ணை கிணறு உள்ளன. இந்த பகுதியை 2 நாடுகளும் சொந்தம் கொண்டாடின. ஆனால் தெற்கு சூடான் அந்த பகுதியை ராணுவம் மூலம் கைப்பற்றி கொண்டது.
இதனால் சூடான், தெற்கு சூடான் மீது ராணுவ தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் சூடான் நேற்று விமானங்கள் மூலம் தெற்கு சூடான் மீது சரமாரியாக குண்டு வீசியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே முழுபோர் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சூடான் அதிபர் ஒமர் அப்பாசீர் கூறும் போது, தெற்கு சூடானுக்கு நாங்கள் சரியான பாடம் புகட்ட போகிறோம் என்று கூறினார்.
இந்த நிலையில் ஐநாசபை தலைவர் பான்கிமூன் தெற்கு சூடான் படைகள் உடனடியாக ஹெக்லிக்கிலில் இருந்து வாபஸ் பெறவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கு தெற்கு சூடான் தலைவர் ஜூவா ஐ.நா.சபை தனது படையை அனுப்பி எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால் நாங்கள் வாபஸ் வாங்க தயார் என்று கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment