இந்திய நாடாளுமன்றக் குழுவின் விஜயம் திட்டமிட்டபடி இடம்பெறும் - வெளிவிவகார அமைச்சு.
இந்தியாவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் இலங்கை க்கான விஜயம் திட்டமிட்டபடி எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கையில், இந்தியாவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் வருகையானது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நலலெண்ண விஜயம் எனவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்விஜயத்தில் இருந்து விலகிக் கொண்டாலும், அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் இலங்கைக்கான வருகையானது திட்டமிட்டபடி இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் இக்குழுவினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திப்பதுடன், போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியைச் சென்று பார்வையிடவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயணம் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கமைய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை நேரில் கண்டறிவதற்கு முக்கியவத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும், தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment