மத்திய வங்கியின் அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிப்பு
2011ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை நாளை வெளியிடப்படவுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் 62 வது அறிக்கையினை, ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்சவிடம் கையளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், பொருளாதார வளர்ச்சி, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கொள்கை விளக்கங்கள், மத்திய வங்கியின் கணக்கு விபரங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment