அமைச்சர் லக்ஷ்மன் செனீவரட்னவின் காரியாலயத்தின் மீது தாக்குதல்
மஹியங்கனையில் அமைந்துள்ள அமைச்சர் லக்ஷ்மன் செனீவரட்னவின் காரியாலயத்தின் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் ஒன்ற நேற்று மேற்கொண்டுள்ளது
மஹியங்கனை சேனபுரவில் உள்ள அமைச்சரின் கட்சிக் காரியாலயத்தின் மீது இனந் தெரியாத இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்தார்.
இதன் காரணமாக உடமைகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன்,சம்பந்தப் பட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்க ப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment