Sunday, April 29, 2012

பள்ளிவாசலை அகற்ற இடமளிப்பதில்லை என முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்

தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களின் முடிவுக்கு கட்சியின் உயர் பீடமும் நேற்று 28ம் திகதி சனிக்கிழமை அங்கீகாரம் வழங்கியதாகவும், அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் உண்மையில் விசமத்தனமாகக் கிளப்பப்பட்டது என்று கூறியுள்ள அமைச்சர், காணிகளை அபகரித்து, பள்ளிவாசல்களை கட்டுகிற ஒரு கூட்டமாக முஸ்லிம்களை காண்பிக்கும் ஒரு முயற்சியே இது என்றும் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் அரசாங்க உயர்மட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு தடுமாற்றம் காணப்பட்டதாகவும் , அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் தீவிரபோக்குடைய சக்திகள் சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொள்வதற்கு இடம்தராத வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com