புத்தாண்டை முன்னிட்டு விசேட கடுகதி புகையிரத சேவை இன்று முதல் ஆரம்பம்.
புத்தாண்டை முன்னிட்டு கொழும் பிற்கும் வெளிமாகாணங்களுக்கும் இடையில் விசேட கடுகதி புகையிரத சேவைகள் இடம் பெறவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
சித்திரை புத்தாண்டுக்காக தமது இருப்பிடங்களுக்கு செல்லும் மக்களின் நலன் கருதியும் பாடசாலை விடுமுறையில் சுற்றுலாக்களை மேற்கொள்ளும் மாணவர்களின் நலன் கருதியும் இவ்விசேட கடுகதி புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றிலிருந்து எதிர்வரும் 12, 16, 18, 20, 22, 24, ஆகிய தினங்களில் காலை 9.15 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் கடுகதி புகையிரதம் பிற்பகல் 6.40 மணிக்கு பதுளை புகையிரத நிலையத்தை சென்றடையும் ஏனவும், நாளை மற்றும் எதிர்வரும் 15, 17, 19, 21, 23, 25 ஆகிய தினங்களில் பதுளை புகையிரத நிலையத்திலிருந்து காலை 5.10மணிக்கு புறப்படும் விசேட புகையிரதம் பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும் எனவும், புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனைவிட கொழும்பு கோட்டையிலிருந்து வவுனியா மற்றும் திருகோணமலைக்கு பயணிக்கும் புகையிரதங்களில் மேலதிக பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும், கரையோர புகையிரத சேவைக்காகவும் விசேட புகையிரதங்கள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன் நாளை தொடக்கம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மருதானை புகையிரத நிலையத்திலிருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் புகையிரதம் முற்பகல் 10.15 இற்கு மாத்தறைக்கு சென்றடையும் எனவும் புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment