முஸ்லிம் காங்கிரஸ்ஸிற்குள் பிளவா?
நடத்தப்படவுள்ள கிழக்கு மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு அக்கட்சியினுள் பலர் முன்வந்துள்ள நிலையில், இதன் காரணமாக கட்சிக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹக்கிம் தீர்மானித்துள்ளார்.
இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் அரசியல் வாதிகள் மற்றம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்காக இந்த மாகாணத்தில் உள்ள ஒருவரே நிறுத்தப்பட வேண்டும் எனவும், இதற்கு பொருத்தமான முஸ்லிம் பிரதிநிதிகள் ஏராளமானோர் கிழக்கில் இருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி பொது செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
1 comments :
hakeemukku priya perasai. suyanalawadthi.evan oru kuranghu
Post a Comment