சட்ட விரோதமான முறையில் கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட நபர் கைது
சட்ட விரோதமான முறையில் கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவரை ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினர்
(25) தெரிவித்தனர்.
இத்தகொடெல்ல- தாகொன்ன பிரதேசத்தை சேர்ந்த டப்ளியூ. ஏ.திமுது என்பவரே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபராவார்.
12 ஆயிரத்து 60 டிராம்ஸ் கோடா , 30 போத்தல் கசிப்பு, எரிவாயு சிலின்டர் , எரிவாயு அடுப்பு , கசிப்பு பரல் 6 என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தரவின்; பேரில் பொலிஸ் பரிசோதகர் அனஸ்லி ,உபபொலிஸ் பரிசோதகர்களான பண்டார, ஹேரத் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களான ஜயதிலக்க, ஹேரத் ஆகியோர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர.
செய்தியாளர் - எம்.இஸட்.எஸ்.
0 comments :
Post a Comment