Tuesday, April 10, 2012

பிறேம்குமார் குணரத்தினம் அவுஸ்திரேலியா பயணம்: திமுது ஆட்டிகல கட்சித் தலைமையகத்தில்

நொயெல் முதலிகே என்று கூறப்படும் பிறேம்குமார் குணரத்தினம் இன்று காலை அவுஸ்திரேலியாவிற்கு பயணமாகியுள்ளார். யு.எல்.314 எனும் விமானம் மூலம் அவர் இன்று காலை 7.56 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூர் விமானத்தில் பயணித்துள்ளதாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இவர் முதலிகே எனும் பெயரிலேயே நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நொயெல் முதலிகே என்பவர் நேற்றிரவு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் ஆஜராகியதாகவும் அவரை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடத்தப்பட்ட சோசலிச முற்போக்கு கட்சியின் உறுப்பினர் திமுது ஆட்டிகல இன்று முற்பகல் கட்சியின் தலைமையகத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடத்தப்பட்டவர்களால் வாகனம் ஒன்றில் அழைத்துவரப்பட்டு, மெதவலவிலுள்ள தலைமைக் கட்சியின் அலுவலகத்திற்கு அருகில் இவர் இறக்கிவிடப்பட்டதாகவும் முச்சக்கரவண்டியில் செல்வதற்கு இவருக்கு பணம் வழங்கப்பட்டதாகவும் முன்னிலை சோஷலிசக் கட்சியின் முக்கியஸ்தர் வருண ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கட்சியின் உறுப்பினர் திமுது ஆட்டிகல மற்றும் பிரேம்குமார் குணரட்ணம் ஆகியோர் கடந்த ஆறாம் திகதி கடத்திச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com