உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த 22 ஏக்கர் பொதுமக்களிடம் ஒப்படைப்பு
மூன்று வருடங்களுக்கும் மேலாக உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப் படுத்தப்பட்டிருந்த முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி பிரதே சத்தின் 22 ஏக்கர் நிலப்பகுதியை இராணுவம் மீண்டும் பொது மக்களிடம் ஒப்படைத்துள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட படைமுகாம் அகற்றப்பட்டு தற்போது நெடுங்கேணி பிரதேசத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் புதிய பாடசாலைக் கட்டிடம் அமைக்கதற்கான அடிக்கல் பொதுமக்களால் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment