1304 சுற்றுலாப் பயணிகளுடன் சொகுசு கொஸ்டா விக்டோரியா கப்பல், இலங்கை வந்தடையவுள்ளது.
இத்தாலி கொஸ்டா கம்பனிக்கு சொந்தமான கப்பல், மாலைதீவிலிருந்து இலங்கை வரவுள்ளது. கப்பல், தாய்லாந்தை நோக்கி, மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. 250 மீட்டர் நீளத்தையும், 7 மாடிகளையும் கொண்ட அதிசொகுசு வாய்ந்த கப்பல், இலங்கைக்கு வருகை தரவுள்ளமை, ஒரு வரலாற்று நிகழ்வாக அமையவுள்ளது. சுதந்திர இலங்கையில், சுற்றுலாத்துறையின் புத்தெழுச்சி, இந்த கப்பலின் வருகையூடாக உறுதிப்படுத்தப்படுவதாக, பிரதியமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஒரே தடவையில் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதன் மூலம், இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி உறுதிப்படுத்தப்படுவதாகவும், அவர் தெரிவித்தார். இலங்கை தொடர்பில் பாரிய நம்பிக்கையுடனேயே இவர்கள் வருகை தருவதாகவும், பிரதியமைச்சர் கூறியுள்ளார். எதிர்காலத்திலும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை வருவதற்கு, பிரயாணிகள் கப்பற் சேவையை பலப்படுத்தப்போவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment