Monday, March 5, 2012

LLRC அறிக்கை தொடர்பாக விவாதிக்க கோர ஐ.நா விற்கு உரிமை கிடையாது!

குமுறுகிறார் குணநாயகம்.

இலங்கையின் கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமை பேரவையில் விவாதமொன்றை நடத்த வேண்டுமென ஐ.நா வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

நவநீதம் பிள்ளையின் இக்கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவரான தமரா குணநாயகம் கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக விவாதமொன்றை நடத்த வேண்டுமென கோருவதற்கு ஐ.நா மனித உரிமை பேரவைக்கு முடியாதென தெரிவித்துள்ளார்.

மேலும் நவநீதம் பிள்ளைக்கு இவ்வாறாதோர் வேண்டுகோளை முன்வைக்க அதிகாராம் கிடையாது என தெரிவித்துள்ள குணநாயகம் பேரவையின் இரட்டை நிலைப்பாட்டுக்கும், பக்கசார்பற்ற தீர்மானங்களை மேற்கொள்வதற்காகவுமே ஐ.நா மனித உரிமை பேரவை ஏற்படுத்தப்பட்டதாகவும், தெரிவித்ததுள்ளதுடன் இலங்கையின் தேசிய ரீதியில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக மனித உரிமை பேரவையில் விவாதமொன்றை கோருவது பிழையான முன் உதாரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் தருஸ்மன் அறிக்கையை ஒப்பிடுவதற்கு ஐ..நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளை மேற்கொண்ட முயற்சிக்கும் இலங்கை தூதுவர் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com