ஐ.நா நீதிமன்ற அதிகாரம் கொண்ட அமைப்பாக மாறக்கூடாது! எச்சரிக்கிறார் தமரா குணநாயகம்.
கடந்த கால சம்பவங்களை கிளறி, மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டால், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, நீதிமன்ற ஜூரிமார் சபை போன்று மாற்றப்பட்டுவிடுமென எச்சரித்துள்ள ஜெனிவாவிற்கான இலங்கைத் தூதுவர் தமரா குணநாயகம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, நீதிமன்ற அதிகாரம் கொண்ட கட்டமைப்பாக மாற்றமடைய கூடாதென் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பாக, 9 நாடுகள் தெரிவித்த கருத்துகளுக்கு, பதிலளிக்கும்போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் அவ்வாறு இடம்பெற்றால், பிழையான முன்னுதாரணம் ஏற்படும் என்பதுடன், ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவைக்கு வழங்கியுள்ள அதிகாரங்களில், மாற்றங்கள் ஏற்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதன்மூலம் இப்பேரவை, அரசியல் மயமாகி, அதன் நம்பிக்கை தன்மையும், சட்ட அந்தஸ்தும் பாதிக்கப்படுமென்றும், தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்..
இலங்கையில் தேசிய தீர்வு இயந்திரமான கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால், முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு, இலங்கையிடம் உள்ள ஆர்வம், இந்நாடுகளினால் சிதைக்கப்பட்டுள்ளன என கவலை தெரிவித்துள்ள அவர் ஐக்கிய நாடுகள் பொது செயலாளரின் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையானது, மனித உரிமை பேரவையினதோ, ஐக்கிய நாடுகள் அமைப்பினதோ அல்லது வேறு எந்த சர்வதேச அமைப்பினதோ அறிக்கையல்லவெனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment