தாயை தாக்கிய தனயனுக்கு விளக்கமறியல்
தனது தாயை தாக்கி காயத்தை ஏற்படுத்தியதுடன் வீட்டிலிருந்த உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக்க் கூறப்படும் நபரை நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடடார்.
இந்த வழக்கின் முறைப்பாட்டாளர் பிட்டிபனை பிரதேசத்தை சேர்ந்த பி. மேரி எலிசபெத் (48வயது) என்பவராவார்.
சந்தேக நபர் வழக்கின் முறைப்பாட்டாளரின் மகனாவார். சந்தேக நபர் தனது தந்தையை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவராவார்.
சந்தேக நபரான தனது மகன் குடிபோதையில் வந்து சண்டை பிடிப்பதாகவும் 21.3.2012 அன்று இரவு 9.30 மணியளவில் குடிபோதையில் வந்து தன்னை தாக்கியதாகவும் , வீட்டிலிருந்த உடை மற்றும் பொருட்களை எடுத்து வீசி தீ வைத்ததுடன் வீடு கட்டப்பட்டிருந்த பலகையை உடைத்து, அந்த தீயில் வீசியதாகவும் வழக்கின் முறைப்பாட்டாளர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment