கின்னஸ் சாதனை குழி சவக் குழியானது : இளைஞன் பலி
கின்னஸ் சாதனையை மேற்கொள்ள முயற்சித்த இளைஞர் ஒருவர் மரணமாகியுள்ளார். கந்தளாய், வான்அல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பாதுகாப்புப் படையில் பணியாற்றிய 24 வயதான இளைஞரே கின்னஸ் சாதனை புரிவதற்காக பயிற்சியிவ் ஈடுபட்டபோது பலியாகியுள்ளார்.
இவர் நேற்று, 10 அடி ஆழமான குழி ஒன்றில் இறங்கி, மண்ணால் மூடிய நிலையில், அதன் மேல் தீ மூட்டிய நிலையில் உள்ளிருந்தபோதே இந்த மரணம் சம்பவித்துள்ளது.
சுமார் நான்கு மணித்தியாலம் பூமிக்குக் கீழ் புதைந்திருந்து உலக சாதனை நிகழ்த்துவதற்கு குறித்த இளைஞன் நேற்றைய தினம் முயற்சித்துள்ளார்.
வெட்டப்பட்ட குழிக்குள் குறித்த இளைஞன் இறங்கிய பின்னர், அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்புடன் பலகைகள் வைக்கப்பட்டு, மண்ணினால் அந்தக் குழி மூடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, குழிக்கு மேல் தீ மூட்டப்பட்டதுடன், நான்கு மணித்தியாலங்களின் பின்னர் அவரது ஆலோசனைகளுக்கு அமைய அந்தக் குழி திறக்கப்பட்டுள்ளது. அதன் போது இளைஞன் மயக்கமுற்ற நிலையில் இருந்துள்ளார்.
பின்னர் அயலவரின் உதவியுடன் இளைஞன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment