பிரபல சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி ராஜேஷ்வரி ஷண்முகம் காலமானார்
இலங்கையின் புகழ் பூத்த அறிவிப்பாளரான “வானொலிக் குயில்” திருமதி ராஜேஷ்வரி ஷண்முகம் இன்று மாலை காலமானார்.
தமது பேரப்பிள்ளைகளைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளை அவர் மாரடைப்பால் காலமானதாகத் தெரியவருகிறது.
சுகயீனமுற்று யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை அவர் இயற்கை எய்தியுள்ளார். இறக்கும்போது அவருக்கு வயது 72.
வானொலித்துறையில் நீண்டகால அனுபவமுள்ள ராஜேஸ்வரி சண்முகத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்!
0 comments :
Post a Comment