போலி டொலர் மற்றும் காசோலைகளை அச்சிடும் நிலையம் சுற்றிவளைப்பு
கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் இயங்கி வந்த போலி டொலர் மற்றும் காசோலைகளை அச்சிடும் நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு சட்டவிரோத பொருட்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நேற்று மாளிகாவத்தை பகுதியில் விசேட சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இங்கிருந்து போலி ஆவணங்கள் மற்றும் போலியாக தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களும் கைப்பற்றப்பட்டன. அத்துடன் இதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி மற்றும் பிரின்டர்களும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் காசோலைகள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோர், இது தொடர்பாக கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment