பிரசவித்த சிசுவை வைத்தியசாலையின் மலசலகூட குழியில் வீசிய யுவதிக்கு பிணை
நீர்கொழும்பு வைத்தியசாலையின் மகப்பேற்று வார்ட்டின் மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து, அந்த குழந்தையை மலசலகூட குழியில் இட்ட சம்பவம் தொடர்பாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த யுவதியை நீர்கொழும்பு மஜிஸ்ரேட்இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
24 வயதுடைய திருமணமாகாத யுவதி ஒருவரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார் . நீர்கொழும்பு பொலிஸார் இந்த வழக்கின் முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜராகியிருந்தனர்.
0 comments :
Post a Comment