நவீன கல்விப் பிரச்சினைக்கு பிரிட்டிஷ் கவுன்சில் உதவிகளை வழங்கி வருகிறது - கல்வி அமைச்சர்
இலங்கை முகங்கொடுக்கும் நவீன கல்விப் பிரச்சினைக்கு பிரிட்டிஷ் கவுன்சில் எண்ணிலடங்காத உதவிகளையும் கல்விச் சேவைகளையும் பல்வேறுபட்ட ரீதியில் வழங்கி வருகின்றது என்று கல்வி அமைச்சர் பந்துல குனவர்தன தெரிவித்தார்.
2012 ஆண்டுக்கான பிரிட்டிஷ் கவுன்சிலின் உலகளாவிய அரச பாடசாலைகளைக் கொண்ட சர்வதேச பாடசாலை விருது வழங்கும் விழா நேற்று திங்கட் கிழமை இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலின் பணிப்பாளர் டோனி ரியிலி தலைமையில் ஏல்ஸ் றீஜென்சி ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
இலங்கைக்கு தகவல் தொலைத் தொலைத் தொடர்பு சாதானம் பற்றிய தொழில் நுட்ப அறிவு விளையாட்டுத்துறை, சுகாதாரம், விஞ்ஞானம் போன்ற பல்வேறு அறிவியல் துறைக்கு பிரிட்ஷ் கவுன்சிலின் பங்களிப்பு அளப்பரியது. உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சர்வதேச செயற்பாடுகளை வடிவமைக்கவும் விருத்தி செய்யவும் நடைமுறைப்படுத்தவும் என்றும் பாராட்டத்தக்கதாக உள்ளன என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாடசாலைகளுக்கு லெப்டொப் உட்பட தொடர்பு சாதானப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதிக் கல்வி அமைச்சர் மொஹான் லால் பெரேரா உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இலங்கையில் பல பாகங்களிலும் உள்ள தெரிவு செய்யப்பட்ட சிங்கள தமிழ் , முஸ்லிம் பாடசாலைகள் கலந்து கொண்டன.
குறிப்பாக விருது வழங்கபட்ட தமிழ் முஸ்லிம் பாடசாலைகளின் பெயர் பின்வருமாறு:-
பண்டாரவளை செர் ராசிக் பரீட் மஹா வித்தியாலயம், பதுளை அல் அதான் மஹாவித்தியாலயம், பதுளை தமிழ் மகளிர் கல்லூரி, மட்டக்களப்பு மிச்சனர் மகளீர் மஹா வித்தியாலயம், செங்கலடி ஏறாவூர் தமிழ் மஹா வித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக் கல்லூரி, கண்டி சித்திலெப்பை மஹா வித்தியாலயம், ஹுன்னஸ்கிரிய சிவனேஸ்வரா தமிழ் மஹா வித்தியாலயம், மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி, கொழும்பு சாஹிராக் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு இந்த விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இக்பால் அலி
0 comments :
Post a Comment